படத்தில் வாய்ப்பு வேணும் என்றால் படுக்கனுமா? சினிமாத் துறை நாறிப்போய் கிடக்கிறது. நடிகையின் ஆபாச வீடியோ குறித்து சனம் ஷெட்டி ஆதங்கம்
சிறகடிக்க ஆசை சீரியல் நடித்துவரும் நடிகை ஸ்ருதி நாரயாணனின் ஆபாச வீடியோ தற்போது தமிழ் சினிமாத் துறையில் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.
சினிமாவில் பட வாய்ப்பிற்காக ஸ்ருதி நாராயணன் வற்புறுத்தப்பட்ட நிலையில் அப்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை வேண்டுமென்றே இணையத்தில் வெளியானதாகவும் தகவல்கள் வந்தன.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்த ஸ்ருதி நாராயணன், வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஸ்ருதி நாராயணனின் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து திரையுலகில் சினிமா வாய்ப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது நடிகைகள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த காஸ்டிங் கவுச்-க்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
அதில், “சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணின் ஆடிஷன் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ உங்களிடம் இருந்தால் ரீஷேர் செய்யாதீர்கள். காம வெறி பிடித்து இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு காமம் வராது, பரிதாபம் தான் வரும் .
ஆனால் இது ஒரு தனிப்பட்ட விஷயம் கிடையாது. இது ஒரு வியாபாரம். காஸ்டிங் கவுச் என்கிற பெயரில் நடத்தப்படும் திட்டமிட்ட ஒரு செயல். படத்தில் வாய்ப்பு வேணும் என்றால் படுக்கனும். வீடியோ காலில் அவர்கள் சொல்வதை செய்யனும். ஒரு பிரபல இயக்குநரின் மேனேஜர் என்னவெல்லாம் பண்ண வைக்க முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார்கள். இந்த பெண்ணும் சிரித்த முகத்துடன் செய்கிறார்.
இதை பார்க்கும் போது மனதில் ஒரே கேள்விதான் வருகிறது. ஆடிஷன் என்கிற பெயரில் என்ன வேண்டுமானாலும் கேட்பீர்களா? இத்தனை பெண்களின் சாபத்தை சம்பாதித்து ஒரு படத்தை எடுத்து நீங்கள் நல்லா இருப்பீங்களா? போய் குப்பையில் போடுங்கள் உங்கள் படத்தை.
ஒரு பக்கம் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை. இன்னொரு பக்கம் காஸ்டிச் கவுச்சில் சிக்காமல், இதை செய்யமாட்டோம் என்று இருக்கும் என்னைப் போன்ற பல நடிகைகளுக்கு இன்று சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இது நியாயமா?
இந்த தப்பு செய்யத் தூண்டுபவர்களை குற்றம் சொல்லும் நேரத்தில் இந்த தப்பை செய்தவர்களையும் குற்றம் சொல்லதான் செய்கிறோம். ஆனால் ஸ்ருதி இந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை ஏஐ என்று என்று சொல்கிறார். இந்த வீடியோவில் இருப்பது அவர்தான் என்றால் அவர் பாதிக்கப்பட்டவர். அவர் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும்.
தமிழ் சினிமாத்துறைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்க சினிமாத் துறை நாறிப்போய் கிடக்கிறது. அதை முதலில் சரி செய்யுங்கள். எங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்பாடு செய்து கொடுங்கள். எங்கள் திறமைகளை பார்த்து நியாயமான வாய்ப்புகளை கொடுங்கள்” என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்
0 Comments