தமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள் - பார்ட் 4 அமர்க்களம்

தமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள் - பார்ட் 4 அமர்க்களம்

எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு படம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நாம் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் "சர்ப்ரைஸ்" காட்சிகள் இருக்கும். பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இது போன்ற "சர்ப்ரைஸ்" நிறைந்த காட்சிகள் கொண்ட படங்கள் தொடர்பான கட்டுரையின் பார்ட் 6 கடந்த கட்டுரையில் பார்த்தோம். இந்த கட்டுரையில் அதன் பார்ட் 7-யை பார்ப்போம்.

 1999 ஆம் ஆண்டு அஜித், ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா, ரமேஷ் கண்ணா என பலர் நடிக்க சரண் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளிவந்தது அமர்க்களம்.

இந்த கதையில் ஒரு முரடன், அவனது கடந்த கால வலிமிகுந்த வாழ்கை, அவனது காதல் என ரசிக்கும்படி சொல்லியிருப்பார்கள்.

அந்த கதாபாத்திரத்தின் தன்மையை சுவாரஸ்யமாக சொல்லி இருப்பார்கள். உதாரணத்திற்கு, தூங்கும்பொழுது அவனை எழுப்பினால் எழுப்பியவர்களுக்கு அடி விழும்.. அல்லது கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை விழும்.. என்பது போல அந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இதில் "சர்ப்ரைஸ்" நிகழ்வாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ஷாலினி வீட்டுக்கு அஜித் வருவார். அவர்கள் வீட்டில் அனைவரும் இருக்கும்போதே இவர்கள் மிகவும் சாதாரணமாக ஆடி பாடுவார்கள். ஷாலினி வீட்டில் உள்ளவர்களும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இந்த பாடல் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" எனத்தொடங்கும்.

இன்னொரு காட்சியில், ஷாலினியை அஜித் கடத்தி ஒரு மலைப்பகுதியில் வைத்திருப்பார். அங்கே பாறையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை பாடலாக ஷாலினி பாடிக்கொண்டிருப்பார்.

இதைப் பார்த்த அஜித்.. கோபம் கலந்த குரலில், பாட வேண்டாம் என திக்கி உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். ஷாலினி அஜித்திடம்  "என்னால பாடாம இருக்க முடியாது" நீ வேணும்னா பாடு, இல்லைனா கத்து மேன் என அலட்சியமாக கூறுவார். 

அப்பொழுது அஜித் அந்த "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" பாடலை உணர்ச்சிவசத்துடன், தன் மனதில் இருந்த  அத்தனை ஏக்கங்களையும், அதெல்லாம் நிகழாமல் போன ஏமாற்றங்களையும் பாடுவார். ஷாலினிக்கு இந்த செயல் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கும். படம் பார்க்கும் நமக்கு "சர்ப்ரைஸ்" ஆக இருக்கும். இந்த நிகழ்வால் அதாவது இந்த இசை ஞானத்தால் அஜித் மீது காதல் ஏற்படுவதாக காட்சிபடுத்தியிருப்பார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளும்படிதான் இருக்கும். 


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments