தமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள் - பார்ட் 5 திருமலை
எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு படம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நாம் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் "சர்ப்ரைஸ்" காட்சிகள் இருக்கும். பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இது போன்ற "சர்ப்ரைஸ்" நிறைந்த காட்சிகள் கொண்ட படங்கள் தொடர்பான கட்டுரையின் பார்ட் 7 கடந்த கட்டுரையில் பார்த்தோம். இந்த கட்டுரையில் அதன் பார்ட் 8-யை பார்ப்போம்.
2003 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் விஜய், ஜோதிகா, மனோஜ் கே ஜெயன், ரகுவரன், கௌசல்யா, விவேக் கருணாஸ் என பலர் நடிக்க அந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் "திருமலை".
அதற்கு முன் ஒரு நிரந்தர வெற்றிக்காகவும், ஆக்சன் ஹீரோவாக "பகவதி" படத்திலிருந்து முயற்சி எடுத்துக்கொண்டிருந்தும் பெரிதாக பலன் கிடைக்காத சூழலில் இந்த படம் விஜய் கேரியரில் ஆக்சன் பாதைக்கு விதை போட்ட வெற்றிப்படம் என்று சொல்லலாம்.
படத்தில் ஒவ்வொரு காட்சியும் புதுமையாக இருக்கும். வேறு படத்தில் இது போன்ற காட்சிகள் வந்திருக்காது என இயக்குனர் சொன்னதற்கேற்ப, ஒவ்வொரு காட்சியும் புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் செல்லும். அந்த வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும்.
சரி அந்த "சர்ப்ரைஸ்" விஷயத்துக்கு வருவோம்.
பொதுவாக எந்த படத்திலும், கல்யாண மண்டபத்திலிருந்து மணப்பெண் காதலனுடன் ஓடிப்போகும் காட்சியை, நண்பர்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்ய உதவி செய்துதான் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த படத்தில் உல்டாவாக அந்த ஜோடியை அழைத்துக்கொண்டு அந்த திருமண மண்டபத்துக்கே வருவார் விஜய்.
அங்கே வந்து அங்கே சில அலப்பறைகளை சமாளித்து, கல்யாண மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொல்வார். அதன் பின் அந்த மாப்பிள்ளையே அவரின் தொழில் நிறுவனத்தில் அந்த பெண்ணின் காதலனுக்கு வேலை தருவார்.
இந்த காட்சி "சர்ப்ரைஸ்" ஆகவும் அதுவரை வெளிவந்த படங்களில் இல்லாத காட்சியாகவும் இருந்தது.
0 Comments