#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

காத்துவாக்குல ரெண்டு காதல் - திரை விமர்சனம்:- மற்றுமொரு ரெட்டைவால் குருவியா இந்த படம்?

காத்துவாக்குல ரெண்டு காதல் - திரை விமர்சனம்:- மற்றுமொரு ரெட்டைவால் குருவியா இந்த படம்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை இந்த படம் பூர்த்தி செய்ததா இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

கதைப்படி விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஸ்டாசலியாக இருக்கிறார். இவர் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது. இவர் பகலில் கார் டிரைவராகவும், இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.

டிரைவராக வேலை செய்யும் போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும் போது சமந்தாவையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் சேதுபதி, ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து எளிதாக மனதை கவர்கிறார். சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

இரண்டு காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இதற்குமுன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது, அதனை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணைய போகிறது என்ற தகவல் வந்ததிலிருந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 

மேலும் இந்த படத்தில் சமந்தா இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருந்தது. இந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்று சொல்லலாம். கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டிருந்தார். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருந்தது. முடிந்த அளவுக்கு மோகன்-பாலுமகேந்திரா கூட்டணியின் ரெட்டை வால் குருவி பட சாயல் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணமாக இருந்தது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் நல்ல விருந்து. ஶ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் - காதல் + கலகலப்பு


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments