#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

எப்படி இருக்கிறது தி பேட்மேன்? - தி பேட்மேன் திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது தி பேட்மேன்? - தி பேட்மேன் திரை விமர்சனம்

சூப்பர் ஹீரோவாக உருவாகி குற்றம் செய்பவர்களை கண்டு பிடிப்பவர் பேட்மேன். ஒரு சீரியல் கில்லர் தொடர்ச்சியாக முக்கிய நபர்களை கொலைசெய்கிறான். காவல்துறையினருக்கு சவால்விடும் வகையில் பொதுவெளியில் கொலைகளை செய்து அனைவரையும் அச்சுறுத்துகிறான். அக்கொலையின் போது சில புதிர்களை விட்டு செல்கிறான். பேட்மேன் சூப்பர் ஹீரோவாக மட்டுமில்லாமல் புலனாய்வு வல்லுனர் போன்று அவருக்கு கிடைத்த புதிர்களை வைத்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். 

இறுதியில் கொலையாளியை பேட்மேன் கண்டு பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

வழக்கமான பேட்மேன் படங்கள் போல் இல்லாமல், கொலை நடக்கும் இடங்களுக்குச் செல்கிறார், விசாரிக்கிறார். ஒரே இடத்துக்குப் பல முறை செல்கிறார், விசாரிக்கிறார் எனக் கதையின் சம்பவங்களும், திரைக்கதை அமைப்பும் 'ஜோடியாக்', 'ட்ரூ டிடெக்டிவ்' பாணியை நினைவூட்டுகின்றன. 

இயக்குனர் மேட் ரீவ்ஸ், இதுவரை இல்லாத சூப்பர் ஹீரோவை புலனாய்வு துறை பாணியில் காண்பித்து படத்தை சுவாரசியப்படுத்தியுள்ளார். திரைக்கதையின் மூலம் அனைவரின் கவனத்தையும் சிதறவிடாமல் படத்தினுள் தொடரவைத்திருக்கிறார்.

ராபர்ட் பேட்டின்சன் அவருடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் இந்த கதைக்கு ஓரளவுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கிறது.

தி பேட்மேன் - சாகசம் போதவில்லை


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments