காத்து வாக்குல ரெண்டு காதலிகள் - விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்

காத்து வாக்குல ரெண்டு காதலிகள் - விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். 

அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Post a Comment

0 Comments