2021-ல் வெளி வந்த சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை
2021-ல் கொரோனா சூழலையும் தாண்டி நிறைய படங்கள் வழக்கம் போல வெளி வந்தது. இதில் சிறந்த படங்களை மாத வாரியாக வரிசைப்படுத்தியுள்ளோம்.
மாஸ்டர்
கொரோனாவால் திரையலகம் ஸ்தம்பித்து இருந்த நேரத்தில் மீண்டும் திரையரங்குகளுக்கு புது ரத்தம் பாய்ச்சிய பெருமை மாஸ்டர் படத்தை சேரும். இந்த படத்தில் டஜன் கணக்கில் நடிகர்கள் நடித்திருந்தாலும் விஜயும், விஜய் சேதுபதியும் பட்டாசாக அசத்தியிருப்பார்கள்.
அன்பிற்கினியாள்
மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் திரைப்படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்திருப்பார். சவாலான பாத்திரம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். திரைக்கதையும் அடுத்து என்ன என்ற பதைபதைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும்.
நெஞ்சம் மறப்பதில்லை
செல்வராகவன் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான இந்த படம் சுமார் 5 வருடங்களாக கிடப்பில் கிடந்து நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் வெளிவந்தது. பெரிய செலவீனங்கள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்பதால் படமும் ஹிட். செல்வராகவனுக்கும் ஒரு ரீஎன்ட்ரி.
டெடி
ஆர்யா-சாயிஷா நடிப்பில் வெளிவந்த இந்த படம் பல ஹாலிவுட் படங்களின் காப்பி பேஸ்ட்டாக இருந்தாலும் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக இருந்தது.
தேன்
தருண் சத்ரியா - அபர்ணதி நடிப்பில் வெளிவந்த இந்த தேன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்களுள் ஒன்று.
மண்டேலா
யோகிபாபு நடித்த இந்த திரைப்படம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக அமைந்தது.
கர்ணன்
மாரி செல்வராஜ் தனுஷ் நடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது. விறுவிறுப்பான திரைக்கதையும், தனுஷின் மிகையில்லாத நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
மலேஷியா டு அம்னிஷியா
ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் காமெடி திரைப்படமாக ரசிக்க வைத்தது. வைபவ், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது.
மேதகு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்கை வரலாற்று படமாக வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு நல்ல படைப்பாக அமைந்தது.
சார்பட்டா பரம்பரை
மெட்ராஸ் படத்திற்கு பிறகு பெரிய அளவில் வெற்றிப்படம் கொடுக்காமல் திணறிக்கொண்டிருந்த ரஞ்சித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொடுத்த மெகா ஹிட் படம் என சார்பட்டா பரம்பரை படத்தைக் கூறலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும்படி உருவாக்கப்பட்ட படமாக இந்த படத்தைக் கூறலாம்.
டிக்கிலோனா
சந்தானம் நடித்த டைம் ட்ராவல் படமான இந்த படம் ரசிக்கும்படியான திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருக்கும். காமெடி பிளஸ் மெசேஜ் என சரியான விகிதத்தில் கலந்து ரசிக்கும்படி கொடுத்திருப்பார் இயக்குனர்.
டாக்டர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த கோலமாவு கோகிலா போன்ற கடத்தல் கதைக்களம்தான் என்றாலும் திரைக்கதையில் டார்க் ஹுயூமர் கலந்து ரசிக்க வைத்திருப்பார் நெல்சன்.
வினோதய சித்தம்
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம், மேடை நாடகத்தை படமாக எடுக்கும் பழைய ட்ரெண்ட் படி வெளிவந்த திரைப்படம். தம்பி ராமையாவின் நடிப்பும் படத்தின் திரைக்கதையும் அசத்தலாக இருக்கும்.
உடன் பிறப்பே
வழக்கமான பாசமலர் கதைதான் என்றாலும் ஜோதிகா-சசிகுமாரின் அசத்தலான நடிப்பு ரசிக்க வைத்தது.
ஜெய் பீம்
சூர்யா நடிப்பில் ஓடிடிக்காக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் சர்ச்சைகளை கடந்து மெகா ஹிட்டடித்தது.
அண்ணாத்த
அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.
மாநாடு
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் வெளிவந்த இந்த திரைப்படம் சிம்புவிற்கு ஒரிஜினல் கம் பேக் படமாக அமைந்தது. எஸ் ஜே சூர்யாவும் சிம்புவும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.
0 Comments