#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

விஜய்க்கு இரண்டாவது படத்தில் தோல்வியை பரிசளித்த இயக்குனர்கள்

விஜய்க்கு இரண்டாவது படத்தில் தோல்வியை பரிசளித்த இயக்குனர்கள்

நடிகர் விஜய் நிறைய வெற்றிப்படங்கள் நடித்திருந்தாலும் அறிமுக இயக்குனர் படங்களில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும். ஒரு முறை ஒரு இயக்குனருடன் இணைந்து ஒரு நல்ல வெற்றியை கொடுத்து விட்டு அதே இயக்குனருடன் இரண்டாம் முறை இணையும் பொழுது அந்த படம் தோல்வியைத் தழுவியிருக்கும்  அல்லது முதல் பட அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்திருக்கும் அப்படிப்பட்ட படங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

காதலுக்கு மரியாதையை - கண்ணுக்குள் நிலவு

1997 ஆம் ஆண்டு பிரபல மலையாள இயக்குனரும் தமிழுக்கு ஏற்கனவே நிறைய வெற்றிப்படங்களை கொடுத்தவருமான இயக்குனர் பாசில் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்த படம் காதலுக்கு மரியாதை. அந்த நேரத்தில் வளரும் நடிகராக இருந்த விஜய்க்கு நல்ல இமேஜ் கொடுத்த படமாகவும் வெற்றிப்படமாகவும் இந்த படம் அமைந்தது. 

2000 ஆம் ஆண்டு இதே கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் கண்ணுக்குள் நிலவு. திரில்லர் படமாக,இளையராஜா இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் அமைந்திருந்தாலும்  இந்த படம் வெற்றி பெறவில்லை. 

நினைத்தேன் வந்தாய் - வசீகரா

1998 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வபாரதி இயக்கிய திரைப்படம் நினைத்தேன் வந்தாய். குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெற்றிவாகை சூடியது இந்த திரைப்படம். ரம்பாவின் நடிப்பும் தேவயானியின் அந்த வெகுளித்தனமான நடிப்பும் இந்த படம் வெற்றி பெற பெரிதும் உதவியது.

2003 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் உருவான திரைப்படம் வசீகரா. பாடல்கள் பட்டையை கிளப்பிய அளவிற்கும், வடிவேல் விஜய் கூட்டணியில் காமெடி ரசிக்கும்படி இருந்தாலும் அந்த நேரத்தில் இந்த படம் வெற்றியை பெறவில்லை.

ப்ரியமுடன் - யூத்

1998 ஆம் ஆண்டு இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய், கௌசல்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ப்ரியமுடன். விஜய் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனம் வந்தாலும் வெற்றிப்படமாக அமைந்தது.  

2002 ஆம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் யூத். விஜய் நடித்த மனதில் தோன்றியதை மறைக்காமல் பேசும், துணிச்சலான  கதாபாத்திரம் ரசிக்க வைத்தாலும், பாடல்கள், காமெடி என இருந்தாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. 

நிலாவே வா - பகவதி

1998 ஆம் ஆண்டு  இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், சுவலட்சுமி, சங்கவி என பலர் நடித்த திரைப்படம் நிலாவே வா. வித்யாசாகர் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்பியது. அந்த நேரத்தில் இந்த படம் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்தது. 

2002 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் விஜய் முதல்முறையாக ஆக்சன் படமாக முயற்சித்த இந்த படம் சுமாரான படமாக அமைந்தது. இந்த படத்திற்கு போட்டியாக அஜித் நடித்த வில்லன், மற்றும் விஜயகாந்த் நடித்த ரமணா போன்ற படங்கள் வெளியானதால் அன்றைய சூழலில் ஆவரேஜ் ஆன  வெற்றியை பதிவு செய்தது இந்த திரைப்படம். 

திருமலை - ஆதி

2003 ஆம் ஆண்டு பெரும் சறுக்கலில் விஜய் இருந்த நேரத்தில்,  விஜய்க்கு ஒரு நல்ல திருப்புமுனை  படமாக அமைந்த திரைப்படம் திருமலை. இந்த படம் விஜயை அதிகாரபூர்வ ஆக்சன் ஹீரோவாக அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தது. ஒவ்வொரு காட்சியும் புதுமையாகவும், ரசிக்கும்படியும் எடுக்கப்பட்டிருக்கும். 

2006 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த திரைப்படம் ஆதி. விஜயின் தயாரிப்பில் தெலுங்கு படத்தை ரீமேக் செய்தார்கள். பெரும் தோல்விப்படமாக அமைந்தது. 

கில்லி - குருவி

2004 ஆம் ஆண்டு ஒருபுறம் விக்ரம் நடிப்பில் தில், தூள் என வெற்றிப்படம் கொடுத்த தரணி. திருமலை என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு விஜய் என அமைந்த இந்த கூட்டணி கில்லி படத்தின் மூலம் இணைந்து வெற்றியை அள்ளியது. வசூல் மன்னன் அந்தஸ்து இந்த படத்தில் இருந்து  விஜய்க்கு ஆரம்பமானது. 

2008 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் குருவி. அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த திரைப்படம். பார்வையாளர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பெரும் தோல்விப்படமாக அமைந்தது.

போக்கிரி - வில்லு

2007 ஆம் ஆண்டு ஆதி பட தோல்விக்குப் பிறகு மிக கவனமாக கால் எடுத்து வைத்த விஜய்க்கு பிரபு தேவா இயக்கிய போக்கிரி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. விஜய் படத்தில் இருக்க வேண்டிய அனைத்து கமர்சியல் அம்சமும், வடிவேல் காமெடி,ஆக்சன், பரபர திரைக்கதை என பட்டாசாக இருந்தது போக்கிரி.

2009 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் விஜய், நயன்தாரா, வடிவேல் என பலர் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த வில்லு திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால்  பெரும் தோல்வியை தழுவியது.  

ப்ரெண்ட்ஸ் - காவலன்

2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா என பலர் நடித்து வடிவேலு காமெடியில் பட்டையை கிளப்பிய திரைப்படம் ப்ரெண்ட்ஸ். மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தமிழில் குடும்பங்கள் ரசிக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.  

2011 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளிவந்த காவலன் திரைப்படம் சுறா போன்ற படங்கள் நடித்து பெரும் சரிவிலிருந்த  விஜயை ஓரளவுக்கு காப்பாற்றினாலும். விஜய்க்கு இது ஆவரேஜ் படமாகவே அமைந்தது. 

அழகிய தமிழ் மகன் - பைரவா

2007 ஆம் ஆண்டு இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய், ஸ்ரேயா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இதில் விஜய் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். இருந்தாலும் இந்த படம் தோல்விப்படமாக அமைந்தது.

2017 ஆம் ஆண்டு பத்து ஆண்டுகளுக்கு பின் இதே கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் பைரவா . கமர்ஷியல் விஷயங்கள் தேவையான அளவு இருந்தாலும். இது விஜய்க்கு ஆவரேஜ் படமாக அமைந்தது.

Post a Comment

0 Comments