கமல்ஹாசன் வித விதமாக வட்டார வழக்கு பேசிய தமிழ் படங்கள்

கமல்ஹாசன் வித விதமாக வட்டார வழக்கு பேசிய தமிழ் படங்கள்

நம் தமிழ் நாட்டில் அனைவரும் பேசுவது தமிழ் மொழியாக இருந்தாலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்களும் ஒவ்வொரு சாயலில் தமிழ் பேசுவார்கள். உதாரணத்திற்கு சென்னையில் வசிப்பவர்கள் சென்னை தமிழும் கோவையில் வசிப்பவர்கள் கொங்கு தமிழும் பேசுவார்கள். சரி நம் கமல்ஹாசன் வசன உச்சரிப்பில் கைதேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவர் வட்டார வழக்கு பேசுவதிலும் கில்லாடி. அவர் வட்டார வழக்கு பேசிய தமிழ் படங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். 

சென்னை தமிழ்

1987 ஆம் ஆண்டு ஜெகந்நாதன் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், அம்பிகா, ராதா என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் காதல்பரிசு. இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் சென்னை தமிழ்  பேசிக்கொண்டு வருவார் அசத்தலாக இருக்கும். 

1998 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில் கமல்ஹாசன், பிரபுதேவா, ரம்பா, சௌந்தர்யா, எம் எஸ் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா என பலர் நடித்த இந்த படத்தில் சென்னை தமிழில் அசத்தியிருப்பார். 

2004 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையில், கமல்ஹாசன், சினேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். இந்த படத்திலும் சென்னை தமிழில் அசத்தியிருப்பார் மனிதர். 

மலையாளம் கலந்த தமிழ்

1991 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காம ராஜன். இந்த படத்தில் டெல்லி கணேஷ் மகனாக மலையாளம் கலந்த தமிழில் அசத்தியிருப்பார். 

கொங்கு தமிழ் 

1995 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில், இளையராஜா இசையில், கமல்ஹாசன், கோவைசரளா, ரமேஷ் அரவிந்த், ஹீரா என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சதிலீலாவதி. இந்த படத்தில் கோவை சரளாவுக்கு ஈடு கொடுத்து கொங்கு தமிழில் விளையாடியிருப்பர் கமல்ஹாசன். 

இலங்கை தமிழ் (ஈழத்தமிழ்)

2000 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் தெனாலி. இந்த படத்தில் இலங்கை தமிழ் பேசும் தெனாலி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். 

மதுரை தமிழ் 

2004 ஆம் ஆண்டு இளையராஜா இசையில், பசுபதி, நெப்போலியன், நாசர் என நட்சத்திரப் பட்டாளங்களோடு கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் விருமாண்டி. இந்த படத்தில் மதுரை தமிழ் பேசும் நபராக விருமாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன். 

நெல்லை தமிழ்

2008 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஹிமேஷ் ரஷமியா, தேவி ஸ்ரீபிரசாத் இசையில் கமல்ஹாசன், நெப்போலியன், நாகேஷ், அசின், சிட்டிபாபு என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். இந்த படத்தில் குமரி மாவட்ட தமிழ் பேசும் வின்சென்ட் பூவராகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல்ஹாசன். 

இதே படத்தில் தெலுங்கு கலந்து பேசும் பல்ராம்  நாயுடு கதாபாத்திரத்திலும் அசத்தியிருப்பார் கமல்ஹாசன். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பால் இதன் பின், சபாஷ் நாயுடு என தனியாக படம் கூட வெளிவருவதாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஜீது ஜோசப் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், ஆஷா சரத், எம் எஸ் பாஸ்கர், சார்லி என பலர் நடித்து வெளி வந்த திரைப்படம் பாபநாசம். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் பட ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் நெல்லை தமிழ் பேசி சுயம்புலிங்கம் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார்.  

Post a Comment

0 Comments