#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

ரசனை மிகுந்த மிஸ்கின் பட மஞ்சள் சேலை பாடல்கள்

அதிகம் ரசிக்கப்பட்ட மிஸ்கின் பட மஞ்சள் சேலை பாடல்கள்

80-களில் தமிழ் சினிமாவில் சுமாரான படங்களும் இளையராஜா பாடல்களுக்காகவே ஓடியது என சொல்வார்கள். அது போல படம் சுமாராக இருந்தாலும் ஒரு பாடல் ஹிட்டானால் அந்த விளம்பரத்தை வைத்தே அந்த படங்கள் ஓடிய அதிசயம் அதன் பிறகும் நிகழ்ந்தது உண்டு. நடிகர் விஜய் நடித்த ஆரம்ப கால காதல் படங்களில் அந்த படங்களின் வெற்றிக்கு பாடல்கள் உதவியதாக சொல்வார்கள். மக்கள் திலகம் எம் ஜி ஆர் தான் நினைத்ததை சொல்லும் கருவியாக பாடல்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டார். அது போலவே ரஜினியும் பிற்காலத்தில் பின்பற்றினார் என சொல்லலாம். 

சரி இவ்வளவு விஷயங்கள் பாடல்கள் மூலமாக நிகழும் போது, ஒரு படம் சின்ன படமாக வெளி வந்து ஆவரேஜ் ஆக ஓடி தியேட்டரை விட்டு எடுக்கப்பட்டு பின் ஒரு பாடலின் மூலம் மீண்டும் வெளியிடப்பட்டு வெற்றிப்படமாக அமைந்தது கேட்கும் போதே ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது.

அந்த படம் 2006 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில், சுந்தர் சி பாபு இசையில், நரேன், பாவனா, "காதல்" தண்டபாணி, என பலர் நடித்து வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படம்தான். வெற்றிக்கு உதவிய அந்த பிரபலமான பாடல் “வாழை மீனுக்கும்” பாடல். இந்த பாடலில் முக்கியமாக இந்த வரிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

"இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ" "தலைவரு திமிங்கலம் தானுங்கோ"

இந்த படத்தின் கதைப்படி வேலை இல்லாமல் அலையும் ஏழையான, படிப்பும் இல்லாத நாயகன் வேறு வழியின்றி அடியாள் வேலைக்குச்செல்கிறான். அவன் வாழ்வில் வரும் பெண், அந்த வேலையை விட்டு விட்டு சாதாரண வாழ்க்கைக்கு அழைக்கிறாள். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் கதை. 

இந்த பட வெற்றிக்குப்பிறகு இயக்குனர் மிஷ்கினின் சென்டிமென்ட் ஆக இந்த மஞ்சள் சேலை பாடல் இரண்டாவது படத்திலும் தொடர்ந்தது.

2008 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில், சுந்தர் சி பாபு இசையில், நரேன், விஜயலட்சுமி, அஜ்மல், பிரசன்னா என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் அஞ்சாதே. இந்த படத்தில் "கத்தால  கண்ணால" என்ற மஞ்சள் சேலை பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலில் "இசையும், நடனமும்" அசத்தலாக இருக்கும். மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க கூடிய பாடலாக இந்த பாடலும் அமைந்தது.

இந்த பாடலில் முக்கியமாக இந்த வரிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

"கலகலவென ஆடும் லோலாக்கு நீ

பளபளவென பூத்த மேலாக்கு நீ

தள தளவென இருக்கும் பல்லாக்கு நீ

வளவலவென பேசும் புல்லாக்கு நீ

ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க

அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

வெண்ணிலா சொந்தகாரிங்க"

இந்த படத்தின் கதைப்படி இரண்டு நண்பர்கள். ஒருவன் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுபவன். இன்னொருவன் பொறுப்புள்ள படித்த நல்லவன். இவர்களில் பொறுப்பற்ற பட நாயகனுக்கு காவல் துறை பணி கிடைக்க, அதே வேலைக்கு உண்மையாக உழைத்து, நல்லவனாக வாழ்ந்து, படித்த அந்த இன்னொருவன் அந்த தேர்வில் தோல்வி அடைகிறான். அதன் பின் அவன் எடுக்கும் முடிவும் அதனால் நடக்கும் நிகழ்வுகளும்தான்  கதை.   

2011 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் இசையமைப்பாளர் கே-யின் இசையில் சேரன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் யுத்தம் செய். 

இந்த படத்தில் வெளிவந்த இயக்குனர் அமீர் நடனமாடிய "கன்னித்தீவு பொண்ணா"  பாடல் "நல்ல இசையுடனும், நடனத்துடனும்" ரசிக்கும்படியான  பாடலாக அமைந்தது.

இந்த வரிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

"வெண்ணிலா கேக்கு என வீட்டுக்காரனாக்கு கொள்ளிக்கட்ட நாக்கு என கொப்பளமா ஆக்கு"

"தஞ்சாவூரு கட்டைய  நீ பிச்சக்கேட்காதே"

சிறந்த திரில்லர் படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தில், சீட்டின் நுனிக்கு கொண்டு செல்லும் காட்சிகளும் மிஷ்கினின் அடையாளமும் இயல்பாகவே இருக்கும்.  

Post a Comment

0 Comments