#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மையால் வெற்றிக்கனியை பறித்த நடிகர்கள்

தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மையால் வெற்றிக்கனியை பறித்த நடிகர்கள்

எந்த ஒரு செயலுக்கு தனித்தன்மை என்பது மிக முக்கியம். ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் இயல்பில் வாழ்வதுதான் அழகு. மற்றவர் போல் நகலெடுக்காமல் ஒவ்வொருவரும் தன்னை தனித்தன்மையோடு உணர்ந்து வாழும்போது வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது. இது திரைத்துறையினருக்கும் பொருந்தும். ஒரு நடிகர் அவருடைய தனித்தன்மையை வெளிப்படுத்தி நடிக்கும் பொழுது அவரால் நீண்ட காலம் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் தமிழ் திரைத்துறையில் தன் தனித்திறமையால் வெற்றிபெற்ற நடிகர்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

 ரஜினிகாந்த்

1.ஸ்டைல் என்ற விஷயத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. 

2.அதுவரை ஹீரோ அறிமுகம் என்றால் அது சண்டைக்காட்சியில் அதிகமாக இருக்கும். அதாவது எதாவது பிரச்சனை நடக்கும் அங்கு நம் ஹீரோ வந்து காப்பாற்றுவார். அனால் ரஜினி பாடலோடு அறிமுகமாகும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

3.அப்பாவித்தனமான பாத்திரங்களில் நடித்தது. ரஜினியை எல்லா கட்ட ரசிகர்களுக்கும் பிடிக்க காரணம் இதுதான். பொதுவாக எல்லோருமே யாரோ ஒருவருக்காக உழைத்து சில நேரங்களில் துரோகத்தை சந்தித்து அதன் பின் கோபக்கார ஆசாமியாக இருப்போம் அல்லது கொஞ்சம் விவரம் தெரிந்த ஆளாக இருப்போம். ரஜினியின் பெரும்பாலான படங்களில் ரஜினியின் பாத்திர படைப்பு இவ்வாறாக இருக்கும். திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை எளிதாக அந்த பாத்திரத்தில் பொருத்திக்கொள்ள முடியும். இதுதான் ரஜினியின் தொடர் வெற்றி ரகசியம்.


அஜித் 

சுயநலம் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்தது. யாரும், முக்கியமாக சினிமா ஹீரோக்கள் தவிர்க்கும்  விஷயம். நம் சமூக அமைப்பில் இப்பொழுது இந்த மாதிரியான குணாதிசயம் கொண்ட மனிதர்கள் நம்மிடையே வாழ்வது மிக இயல்பு. நல்லவர்களாக வாழ்பவர்களை பிழைக்கத்தெரியாதவர்கள் என சுற்றி உள்ளவர்களே கூறுவது சாதாரணம். ஆனால் நம் சினிமா ஹீரோக்கள் மட்டும் ரொம்ப நல்லவர்களாக நடிப்பது சில நேரங்களில் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். அது போன்ற சலிப்புதான் அஜித்தின் வெற்றி. மேலும் சாக்லேட் ஹீரோ இமேஜில் இருந்து ஆக்சன் ஹீரோ இமேஜிக்கு தன்னை தகுதிப்படுத்தி கொண்டது தனித்தன்மைதான்.


முரளி 

 இவருக்கு இது இயற்கையிலே அமைந்த விஷயம் அது என்னவென்றால் நிறம் கருப்பு ஆனாலும் அழகான ஹீரோ. இவர் நடிக்க வந்த புதிதில் இவரின் நிறம் காரணமாக அவமானங்களை சந்தித்திருக்கிறார். நாம் பெரும் அவமானங்கள் ஒரு கட்டத்தில் நமக்கு வெகுமானங்களாக மாறும். அது முரளிக்கு நடந்தது. அந்த கன்னட படம் நல்ல வெற்றியைக்கொடுக்க தமிழில் பூவிலங்கு படம் மூலம் அறிமுகமானார். ஹீரோ என்றாலே கலராக இருக்க வேண்டும் என்ற விதியை ரஜினி போன்றவர்கள் மாற்றி இருந்தாலும் நம் மண்ணின் நிறத்தில் "களையோடு" என்று சொல்லும் அளவிற்கான அழகோடு அன்றைய ரசிகர்களை கவர்ந்தவர். 


மோகன் 

இவருடைய மைனஸாக கருதப்படுவது இரவல் குரலில் பேசினார் என்ற கருத்து. அதே நேரத்தில் நடிப்பில் ரசிகர்களுக்கு இவர் எந்த குறையும் வைக்கவில்லை. பறந்து பறந்து சண்டை போடும் கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுக்காமல் நல்ல நல்ல குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து ரசிக்கும்படி நடித்தவர். இப்பொழுது இவர் மைக் மோகன் என கிண்டல் செய்யப்பட்டாலும் அந்த காலகட்டத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய நிறைய பாடல்களை படத்தில் தான் பாடியது போன்ற பாடலுக்கு மிக நெருக்கமான நடிப்பை வழங்கி இருப்பார். அனைவராலும் ரசிக்கப்பட்ட நல்ல நடிகர் மோகன்.


கார்த்திக் 

வதந்தி என்ற சொல்லுக்கு பெயர் மாற்ற வேண்டும் என்றால் அந்த காலகட்டத்தில் கார்த்திக் என மாற்றலாம் என்று சொல்லும் அளவிற்கு நிறைய சர்ச்சைகளை சந்தித்த நடிகர். படப்பிடிப்புக்கு கண்ட நேரத்தில் வந்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்துவது என்பது கார்த்திக்கிற்கு அப்பொழுது இருந்த அல்டிமேட் கெட்ட பெயர். அதையும் மீறி நிறைய படங்கள் நடித்தார். வெற்றிப்படங்களாக அவர் நிறைய படங்களில் நடித்ததால், அவரது குறைகளைத் தாண்டி அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. படப்பிடிப்புக்கு வந்து விட்டால் நடிப்பில் குறை வைக்காத நடிகர் என்ற நல்ல பெயரும் கார்த்திக்-க்கு உண்டு. 

இவருடைய தனித்தன்மை என பார்த்தால் துறுதுறுப்பு மற்றும் சுட்டித்தனமான சேட்டைகள் என்று சொல்லலாம். இளம் பெண்கள்  மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். சீரியஸ் ஆன காட்சிகளிலும் மனிதர் வெளுத்து வாங்குவார்.



Post a Comment

0 Comments