#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்க வாய்ப்புள்ளதா? உண்மை நிலவரம் என்ன?

பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்க வாய்ப்புள்ளதா? உண்மை நிலவரம் என்ன?

விஜய் டிவியில் கடந்த 4 சீஸன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையோடு கலந்து வெற்றிகரமாக ஒளிபரப்பானது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அக்டோபரில் தொடங்க ஏற்பாடுகளை செய்துவருகிறது விஜய் டிவி. இந்நிலையில்  பிக்பாஸ் - 5 சீசனை கமல்ஹாசனே தயாரிக்கப்போவதாகவும், இதை நடத்திவந்த ENDEMOL SHINE நிறுவனம் வெளியேறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகிறது. உண்மை நிலவரம்தான் என்ன?

ENDEMOL SHINE நிறுவனம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காப்பிரைட்ஸ் வாங்கி தொடர்ந்து உலகம் முழுக்க இந்த ரியாலிட்டி ஷோவை நடத்திவருகிறது. இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் இந்த நிறுவனம்தான் நடத்திவருகிறது. எந்த பிரச்சனையையும் இலகுவாக கையாள்வதில் வல்லவர்கள்.

இந்த ENDEMOL SHINE நிறுவனத்தை கடந்த வருடம்  BANIJAY எனும்  நிறுவனம் வாங்கிவிட்டது. BANIJAY நிறுவனம் உலகம் முழுக்க கிளைபரப்பியிருக்கும் புகழ்பெற்ற மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவிக்கான சில டிவி சீரியல்களையும்  தயாரித்திருக்கிறது.

இந்த BANIJAY நிறுவனத்துடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸும், டிவி மகேந்திரனின் டர்மரிக் மீடியா நிறுவனமும் இணைந்து ஓடிடி வெப்சீரிஸ்கள் உள்பட சில நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவு செய்து பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது. இதை வைத்துதான் பிக்பாஸ் -5 சீசன் நிகழ்ச்சியை கமல்ஹாசனே தயாரிக்கப்போவதாக செய்திகள் பரவியிருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சிக்கான உரிமங்கள் இப்போது BANIJAY நிறுவனத்திடம் இருக்கிறது. இந்த ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக மட்டுமே கமல்ஹாசன் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புக்கும் கமல்ஹாசனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.



சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments