#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தளபதி, தேவர்மகன் பட சாயலில் வெளிவந்த தமிழ் படங்கள்

தளபதி பட சாயலில் வெளிவந்த தமிழ் படங்கள்

1991-ல் மணிரத்னம் - இளையராஜா கூட்டணியின் கடைசி படைப்பாக வெளிவந்த திரைப்படம் தளபதி. ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா நடித்த  இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் மாஸ் படங்களாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிக்கும் கிளாஸ் படமாக அமைந்தது. இந்த படத்தின் சாயலில் வெளிவந்த படங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தீனா 

2001-ல் யுவன்ஷங்கர்ராஜா இசையில், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் முதல் படமாக வெளிவந்த இந்த திரைப்படம் அஜித்திற்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. "தல" என்ற பட்டமும் இந்த படத்தில் இருந்துதான் உச்சரிக்கப்பட்டது. அஜித், சுரேஷ் கோபி நடித்த இந்த படம் கிட்டத்தட்ட தளபதியின் சாயலில் இருக்கும். திரைக்கதையில் சில பல மாற்றங்கள் செய்திருப்பார் ஏ ஆர் முருகதாஸ்.

அஞ்சான் 

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  2014-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சான். இந்த படமும் கிட்டத்தட்ட தளபதி சாயலில் இருக்கும். திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யாமல் மேஜிக்கை மட்டும் நம்பியதால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் தோல்வியைத்தழுவியது.

ஜில்லா

2014-ல் இயக்குனர் நேசன் இயக்கத்தில், டி இமான் இசையில், விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி நடித்த ஜில்லா படத்தில் தளபதி சாயலில் எடுத்த அஜித் படமான தீனா படத்தின் சாயல் இருக்கும்.

தேவர்மகன் பட சாயலில் வெளிவந்த தமிழ் படங்கள்

1992-ல் மலையாள இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இளையராஜா இசையில் பாடல்களும், கமலின் திரைக்கதையில் படமும் செமயாக இருக்கும். சரி இந்த படத்தின் சாயலில் வெளிவந்த படங்களைப்பற்றி பார்ப்போம்.

நந்தா 

சேது படத்தின் எதிர்பாரா வெற்றிக்குப்பிறகு பாலா இயக்கத்தில் 2001-ல்      சூர்யா, லைலா, ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த இந்த படம் சூர்யாவுக்கு ஒரு நல்ல திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படம் தேவர் மகன் சாயலில் இருக்கும் திரைக்கதையில் வித்தியாசம் காட்டி இருப்பார் பாலா.

சண்டக்கோழி

2005-ல் லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் விஷால் - மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த படம் சண்டக்கோழி. இந்த படம் விஷாலின் இரண்டாவது படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் சாயலும் தேவர் மகன் போல் இருக்கும். ஆனால் திரைக்கதையில் வித்தியாசம் இருக்கும். காட்சிக்கு காட்சி சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்தி இருப்பார் இயக்குனர் லிங்குசாமி. 2018-ல் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.


Post a Comment

0 Comments