#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள்

தமிழ் சினிமாவின் சர்ப்ரைஸ் காட்சிகள்

 எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு படம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நாம் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் "சர்ப்ரைஸ்" காட்சிகள் இருக்கும். பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இது போன்ற "சர்ப்ரைஸ்" நிறைந்த காட்சிகள் கொண்ட படங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

மான் கராத்தே

2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஹன்ஸிகா நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கதையில்  க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மான் கராத்தே. இந்த படம் ஒரு பேஃன்டசி  திரைப்படமாக வந்தது. 

இந்த படத்தின் முதல் காட்சியில் ஐ டி யில் பணிபுரியும் காமெடி நடிகர் சதிஷ் கொண்ட குழுவினர் வேலை இழந்து பின் வெளியூரில் ஒரு காட்டுப்பகுதிக்கு செல்வார்கள். அப்போது ஒரு அருவியில் குளித்துக்கொண்டு இருக்கும்பொழுது நீருக்கடியில் தியானத்தில் இருக்கும் சாமியார் வெளியே வந்து அவர்களுக்கு அருள்புரிவார். அப்பொழுது அவரை பெரிதாக மதிக்காமல் உதாசீன தொனியில் அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருப்பார் சதிஷ். 

பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஆயுத பூஜை தேதியில் ஒரு தினசரி பேப்பரை கேட்பார் சதிஷ். சாமியாரும் ஆயுத பூஜை தேதியில் ஒரு தினசரி பேப்பரை கொடுப்பார். அதில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக நிஜத்தில் நடக்கும்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஒரு குத்துசண்டை போட்டியில் முன்பே ஜெயிப்பவர் பெயர் தெரிந்து அது சிவகார்த்திகேயன் என நினைத்து அவருக்காக தண்ணீராக பணத்தை செலவு செய்து பயிற்சி அளிப்பார்கள். 

ஒரு கட்டத்தில் நாம் நினைத்த ஆள் இவர் இல்லை என நினைத்து பாதியில் கழட்டி விட்டு சென்று விடுவார்கள்.

ஆனால் இறுதியில் அந்த குத்துசண்டை போட்டியில் சிவகார்திகேயன்தான் ஜெயிப்பார். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆரம்ப காட்சியில் சாமியார் அந்த தினசரி பேப்பரை கொடுத்தவுடன் அதில் நம்பிக்கை இல்லாமல் அலட்சியமாக சதிஷ் அந்த பேப்பரின் ஒரு பகுதியை கிழித்து விபூதி எடுத்து கொள்வார். அப்படியே பேப்பரின் அந்த பகுதியை அங்கேயே விட்டு சென்று விடுவார்.

படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் அதே அருவியை காட்டுவார்கள். அங்கே சதிஷ் கிழித்து வீசிய அந்த பேப்பரின் அந்த சிறு பகுதி காட்டப்படும். அதில் சிவகார்த்திகேயன் புகைப்படம் இருக்கும். படம் பார்த்தபோது செம "சர்ப்ரைஸ்" ஆக அந்த காட்சி இருந்தது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

பிச்சைக்காரன் 

2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டது. 

இந்த படத்தின் கதைப்படி விஜய் ஆண்டனியின் அம்மா மிகவும் கவலைக்கிடமாக இருப்பார்.  அனைத்து மருத்துவமும் பார்த்து குணமாகாமல் கிட்டத்தட்ட சாகும் தருவாயில் இருக்கும் தன் தாய்க்காக பண வசதி கொண்ட நாயகன், வேண்டுதலுக்காக  ஒரு குறிப்பிட்ட நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்வார்.

ஒருவழியாக அந்த நாட்கள் முடிந்து அவரின் தாயும் குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்பி விடுவார். இதன் பின் படத்தின் கடைசி காட்சியில் விஜய் ஆண்டனி, அவர் தாய், அவரின் மனைவி மூன்று பெரும் வெளியில் செல்வதற்காக காத்திருப்பார்கள் ஒரு இடத்தில். அப்பொழுது விஜய் ஆண்டனி போனில் பேசிக்கொண்டிருப்பார். 

அப்போது நீண்ட நேரமாக ஒரு பிச்சைக்காரர் அவரிடம் பிச்சை கேட்பார். அதை கவனிக்காமல் போனில் பேசிக்கொண்டிருப்பார் விஜய் ஆண்டனி. அப்போது அவரின் அம்மா பிச்சைக்காரரை அழைத்து பிச்சை போட்டு அனுப்பி விடுவார்.

விஜய் ஆண்டனி போன் பேசி முடித்த பின் விஜய் ஆண்டனியிடம் அவரது அம்மா சொல்வார்.

"யாரா இருந்தாலும்  காக்க வைக்க கூடாது. இல்லைனா இல்லைனு சொல்லிரனும் என்பார்"

"ஒரு நாள் நம்மளால அந்த வாழ்க்கைய வாழ முடியுமா "  என்று கேட்பார்.

உடனே விஜய் ஆண்டனி "சரிம்மா" என்பார். சொல்லிவிட்டு மனைவியை பார்ப்பார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த  கதாநாயகியான விஜய் ஆண்டனியின் மனைவி "ஒரு ஆச்சர்யம் கலந்த பார்வையாக பார்ப்பார்" அதாவது இவரும் சில நாட்கள் வேண்டுதலுக்காக பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவர்தானே இது அம்மாவுக்கு தெரியதல்லவா!! இந்த காட்சி "சர்ப்ரைஸ்" ஆகவும் வசனங்கள் இன்றியும் நமக்கு கடத்தப்பட்டிருக்கும்.


Post a Comment

0 Comments