#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

’வலிமை’ அப்டேட்டை கேட்டு சொல்லுங்க.. வானதி சீனிவாசனுக்கு நச்சரிப்பு

🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔

* "வலிமை" அப்டேட்டை கேட்டு சொல்லுங்க.. வானதி சீனிவாசனுக்கு நச்சரிப்பு

* நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம் - சமந்தா

* தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் - கேப்ரியல்லா

* இதுவரைக்கும் நடிக்கும் எண்ணம் இல்லை -  ரோஜா மகள் அன்சுமாலிகா

* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நடிகர் சூர்யா

* இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு  கொரோனா

"வலிமை" அப்டேட்டை கேட்டு சொல்லுங்க.. வானதி சீனிவாசனுக்கு கோரிக்கை

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் வானதி சீனிவாசன். சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று ஒருநாள் கேட்டு இருந்தார். அப்போது வானதி சீனிவாசன் அதற்கு பதிலளிக்கையில் ’நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி’ என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறிய அஜித் ரசிகர்கள் ’நீங்கள் வாக்குறுதி கொடுத்தபடியே ’வலிமை’ அப்டேட்டை கேட்டு சொல்லுங்க’ என்று விடாமல் கேட்டு வருகின்றனர். 

அஜித் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ’வலிமை’ அப்டேட்டை வானதி சீனிவாசன் வாங்கி தருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம் - சமந்தா

* தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்திய பேட்டியில் கொரோனா குறித்து கூறியதாவது: “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும். கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள். 

அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது.

கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் கொரோனாவை ஜெயித்து விடலாம். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம்’' என்றார்.

தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் - கேப்ரியல்லா

* பிக் பாஸ் 4 மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. தற்போது இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கேபி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன் தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரைக்கும் நடிக்கும் எண்ணம் இல்லை -  ரோஜா மகள் அன்சுமாலிகா

* இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. 

அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், 

“வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன், இதுவரைக்கும் நடிக்கும் எண்ணம் இல்லை” என்று அவர் பதில் அளித்து இருக்கிறாராம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நடிகர் சூர்யா

* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம்.

தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமிழகத்தில் உரிமையை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு  கொரோனா

* இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர்களது மகனும், நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சாந்தனு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனது பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து எங்கள் வீட்டில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். 

கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்." இவ்வாறு சாந்தனு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments