🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔
* கொரோனா நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கிய நிதி அகர்வால்
* கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்த இயக்குனர் லிங்குசாமி
* புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் - கார்த்தி எடுத்த நல்ல முடிவு
* நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை - 'நவம்பர் ஸ்டோரி' பற்றி தமன்னா கருத்து
கொரோனா நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கிய நிதி அகர்வால்
* ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் ஆன்லைன் மூலம் உதவிகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நிதி அகர்வால், கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே டிஸ்டிரிப்யூட் லவ் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளார். இதில் ஒரு குழுவை நியமித்து எந்தெந்த பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பதை அறிந்து உடனுக்குடன் இந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்யப் இருக்கிறார் நிதி அகர்வால்.
கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்த இயக்குனர் லிங்குசாமி
* இயக்குனர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இயக்குனர் லிங்குசாமி டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் - கார்த்தி எடுத்த நல்ல முடிவு
* முன்னணி நடிகர்கள் பலரும் புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைத்து வருகின்றனர். பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெறும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி தன்னுடைய படங்களில் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். இது குறித்து கூறிய கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது நல்ல விஷயம்தான்.
நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை - 'நவம்பர் ஸ்டோரி' பற்றி தமன்னா கருத்து
* நவம்பர் ஸ்டோரியை மில்லியன் கணக்கான இந்தியர்கள் இந்தத் த்ரில்லர் வெளியான இந்த வார இறுதியில் பார்த்துள்ளனர். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இந்த தொடரை ராம் சுப்பிரமணியன் இயக்கி இருக்கிறார். தமன்னாவுடன் இதில் பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த தொடரின் வெற்றி குறித்து தமன்னா கூறுகையில், “நவம்பர் ஸ்டோரி' பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத்தந்த பாராட்டு மற்றும் அன்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்ட்டுடன் வழங்கப்படும்போது அதற்கு முழு அளவில் மக்கள் வரவேற்பை வழங்குவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும்போது, நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது" என்றார்.
0 Comments