#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔

* கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

* இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படும் "ஒத்த செருப்பு" 

* சூரரைப் போற்று படத்தின் புதிய சாதனை

* இயக்குனர் வசந்த பாலனின் உருக்கமான வலைதள பதிவு

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

* கமலின் ‘விக்ரம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகினார் ஆண்டனி வர்கீஸ். இதனால் அவரை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படும் "ஒத்த செருப்பு" 

* ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆங்கில ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூரரைப் போற்று படத்தின் புதிய சாதனை

* பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

இயக்குனர் வசந்த பாலனின் உருக்கமான வலைதள பதிவு  

* இயக்குனர் வசந்தபாலன் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 20 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற பின் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள இயக்குனர் வசந்தபாலன், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன். நட்பின் கரங்கள் எனை அன்பின் சிப்பியில் அடைகாத்து அருளியதால் சுகமாய் இல்லம் திரும்பியிருக்கிறேன். 

நன்றியை விட உயர்ந்த வார்த்தை உண்டெனில், உணர்ச்சிக்கரமான வார்த்தை உண்டெனில், கண்ணீர் கசியும் வார்த்தை உண்டெனில், அதை என் நட்பின் திசையெங்கும் படைக்கிறேன். ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு மெல்ல பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments