🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔
* ஓடிடி-யில் வெளிவரும் விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி
* சிரஞ்சீவி படத்தை மோகன் ராஜா இயக்குவதில் சிக்கல்?
* 12 மொழிகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்
* மீண்டும் பாலிவுட்டில் நடிக்கும் துல்கர் சல்மான்
ஓடிடி-யில் வெளிவரும் விஜய்சேதுபதியின் கடைசி விவசாயி
* விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரஞ்சீவி படத்தை மோகன் ராஜா இயக்குவதில் சிக்கல்?
* தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
ஏனெனில், கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருந்தாராம் சிரஞ்சீவி. ஆனால் மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை திருப்திபடுத்தவில்லையாம். இதனால் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவியின் இந்த முடிவால் படத்தின் ரீமேக் உரிமையை வேறு தயாரிப்பாளருக்கு விற்க ராம்சரண் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 மொழிகளில் வெளியாகும் ஆர்.ஆர்.ஆர்
* ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, ஆங்கிலம், கொரியன், துர்க்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய அந்நிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அவற்றோடு ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். இதன்மூலம் ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலக அளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பாலிவுட்டில் நடிக்கும் துல்கர் சல்மான்
* மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் துல்கர் சல்மான். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது.
இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நடிகர் துல்கர் சல்மான் இந்தியில் நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். தனுஷ் பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படத்தை இயக்குனர் பால்கி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments