மேலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது, ‘மேலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. அதற்கு உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகே அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன்.
‘அண்ணாத்த’ படம் என் கரியரில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. இப்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. எல்லோரும் வீட்டுக்குப் போய் பத்திரமா இருங்க. மீதி இருக்கும் பணிகளை கொரோனா குறைந்த பிறகு செய்யலாம் என சொன்னாராம்.
0 Comments