🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔
* வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
* நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா சகோதரர்கள் அளித்த கொரோனா நிதியுதவி
* இயக்குனர் பாலா தயாரிக்கும் ‘விசித்திரன்’
வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
* ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். இந்த வெப்தொடரை பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே ஆகியோர் இயக்கி உள்ளனர்.இந்த வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளாராம் சமந்தா. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெப் தொடர் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா சகோதரர்கள் அளித்த கொரோனா நிதியுதவி
* எடிட்டர் மோகன், அவரது மகன்களான நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
இயக்குனர் பாலா தயாரிக்கும் ‘விசித்திரன்’
* மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்படத்தின் வெளியீடு தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments