#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

ஓடிடி-யில் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்

🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔

* ஓடிடி-யில் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்

* 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் - வைரமுத்து

* பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் மீனா

* ஓடிடி-யில் வெளியாகும்  ‘மலேஷியா டூ அம்னீஷியா’

ஓடிடி-யில் அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் படங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி இப்படம் வருகிற மே 14-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது.

 

'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் - வைரமுத்து

வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?’ என்று பதிவு செய்திருக்கிறார்.

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் மீனா

நடிகை மீனா, புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளாராம். கோபிசந்த் மிலினேனி இப்படத்தை இயக்க உள்ளார். 

மீனாவும், பாலகிருஷ்ணாவும் கடைசியாக 1999-ம் ஆண்டு வெளியான கிருஷ்ண பாபு என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைய உள்ளனர்.

ஓடிடி-யில் வெளியாகும்  ‘மலேஷியா டூ அம்னீஷியா’

‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். 

இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments