🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔
* விஷால் - கார்த்திக் தங்கவேல் இணையும் புதிய படம்
* ஆக்ஸிஜன் வாங்க நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா
* அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள் - விஷால்
* நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
* நானும் முதல்வனே - பார்த்திபக்குறும்பு
விஷால் - கார்த்திக் தங்கவேல் இணையும் புதிய படம்
*விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் விஷால். இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருடன் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஆக்ஸிஜன் வாங்க நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா
* பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்த பணியில் இறங்கி உள்ளார். கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி குவிந்துள்ளது. இந்த பணம் பெங்களூர் மற்றும் மும்பைக்கு ஆக்ஸிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது.
அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள் - விஷால்
* திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள். அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன். அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.
நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
* நடிகர் கார்த்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
நானும் முதல்வனே - பார்த்திபக்குறும்பு
* நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது: “இன்று... உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல... உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக. வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும், மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்” என அவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு டுவிட்டில் “மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே. கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”- என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன்” என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments