🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔
* ஓடிடி-யில் வெளியாகும் விஷ்ணு விஷால் படம்
* இயல்புநிலைக்கு திரும்பியது வீடு - ‘மேயாத மான்’ பட இயக்குனர் உருக்கம்
ஓடிடி-யில் வெளியாகும் விஷ்ணு விஷால் படம்
* விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயல்புநிலைக்கு திரும்பியது வீடு - ‘மேயாத மான்’ பட இயக்குனர் உருக்கம்
* வைபவ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார். இதையடுத்து அமலாபாலின் ‘ஆடை’ படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், தனது குடும்பத்தினர் 14 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் ரத்ன குமார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
0 Comments