🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔
* 61வது பிறந்த நாள் கொண்டாடும் மோகன்லால்
* ஜி.வி.பிரகாஷின் ரீ-ட்வீட்
61வது பிறந்த நாள் கொண்டாடும் மோகன்லால்
* மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இன்று அவர் தனது 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர். வழக்கமாக ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடுவார் மோகன்லால்.
அதேபோல இந்தமுறை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சில நண்பர்களுடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷின் ரீ-ட்வீட்
* சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், 'இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.
0 Comments