🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔
* 50 லட்சம் நிதியுதவி அளித்த ரஜினிகாந்த்
* கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
* அசுரன் புகழ் நிதிஷ் வீரா உயிரிழந்தார்
* அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா உயிரிழந்தார்
50 லட்சம் நிதியுதவி அளித்த ரஜினிகாந்த்
* ரஜினிகாந்த், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் ரஜினிகாந்த்.
கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
* நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அசுரன் புகழ் நிதிஷ் வீரா உயிரிழந்தார்
* புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். நிதிஷ் வீரா தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
புதுப்பேட்டை படத்திலும், அசுரன் படத்திலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நிதிஷ் வீரா.
நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா உயிரிழந்தார்
* அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். சிந்துஜாவின் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
0 Comments