#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

விரைவில் 'கைதி 2' உருவாக வாய்ப்பு

🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔

* விரைவில் 'கைதி 2' உருவாக வாய்ப்பு

* 5 மொழிகளில் வெளியாகும்  ‘கே.ஜி.எப் 2’

* தன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் கார்த்தி

* சாய்பல்லவி நடித்த பட பாடல்களின் புதிய சாதனை

விரைவில் 'கைதி 2' உருவாக வாய்ப்பு

* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். மீடியம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் 'கைதி 2' கண்டிப்பாக உருவாகும் என்று கூறினார். முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2-ம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் 'கைதி 2' குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக 'கைதி 2' உருவாகும்" என்று கூறியுள்ளார்.

5 மொழிகளில் வெளியாகும்  ‘கே.ஜி.எப் 2’

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஜூலை 16-ம் தேதி  ‘கே.ஜி.எப் 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.  இந்நிலையில், தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஜி.எப் 2 படம் திட்டமிட்டபடி ஜூலை 16-ம் தேதி வெளியாகாது எனக் கூறப்படுகிறது. 

தன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் கார்த்தி

* நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. 

அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சாய்பல்லவி நடித்த பட பாடல்களின் புதிய சாதனை

* நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 1,150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே போல் ‘பிடா’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘வச்சிந்தே’ என்ற பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

தற்போது அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ என்ற பாடலும் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments