🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔
* இந்தியில் ரீமேக்காகும் 'திரிஷ்யம் 2'
* சகோதரருக்கு உதவி கேட்ட பியா பாஜ்பாய்
* விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன் - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி
* முடக்கப்பட்ட கங்கனாவின் டுவிட்டர் கணக்கு
* 17 மொழிகளில் டப் செய்யப்படும் ஜகமே தந்திரம்
இந்தியில் ரீமேக்காகும் 'திரிஷ்யம் 2'
* சில மாதங்களுக்கு முன் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் 'திரிஷ்யம் 2' வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த வரவேற்பால் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது. தற்போது படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் குமார் மங்கத் பதக் வாங்கி இருக்கிறார்.
சகோதரருக்கு உதவி கேட்ட பியா பாஜ்பாய்
* ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன் - இயக்குனர் தேசிங்கு பெரியசாமி
* இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வலம்வந்தன. இந்நிலையில், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தேசிங்கு பெரியசாமி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அடுத்த படம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை. விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன். தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட கங்கனாவின் டுவிட்டர் கணக்கு
*டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சில சமயங்களில் அதன்மூலம், அவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு, அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
17 மொழிகளில் டப் செய்யப்படும் ஜகமே தந்திரம்
* தமிழில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments