#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

மஞ்ச சட்ட பச்ச சட்ட - திரை விமர்சனம்:- நான்கு கதைகளின் மையப்புள்ளி அடிதூள்!

மஞ்ச சட்ட பச்ச சட்ட - திரை விமர்சனம்:- நான்கு கதைகளின் மையப்புள்ளி அடிதூள்!

ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும், சுயநல கார்பரேட் புரோக்கருக்கும் இடையே ஒரு விரோதம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெறுகிறது. அதே நாளில் தங்களை கண்டுக்கொள்ளாத சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்திக் காட்ட இரு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியை தழுவுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட இதில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகனும் அவன் நண்பனும்.

பணம் சம்பாதிக்க தெரியாத கதாநாயகன், பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரி, சுயமாக சிந்திக்க தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள், சுயநினைவே இல்லாத இரண்டு மனநோயாளிகள், பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதித்ய வர்மன், கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். நாயகியாக வரும் ரேணு செளந்தர், அழகு பதுமையாக வந்து செல்கிறார். 

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துடையது தான், அரசியல்வாதியாக நடித்துள்ள அவர், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி, நான்கு வெவ்வேறு கதைகளை கையாளும் பொழுது அதை ஓரிடத்தில் இணைக்கும் மையப்புள்ளி சரியாக அமைய வேண்டும். இந்த படத்தில் அது நடந்திருக்கிறது. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்த விதம் சிறப்பு.

 அதேபோல் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள விதம் அருமை. காமெடியும் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ஜெய் சுரேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது.

மஞ்ச சட்ட பச்ச சட்ட - காமெடிக்கு கேரண்டி

Post a Comment

0 Comments