#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

விவேக் நடித்து வெளிவர இருக்கும் படங்கள்

🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔

* விவேக் நடித்து வெளிவர இருக்கும் படங்கள்

* வீரமாதேவி என்ற புதிய படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

* ஒத்தி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

விவேக் நடித்து வெளிவர இருக்கும் படங்கள்

* சமீபத்தில் மறைந்த விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன. 

நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

வீரமாதேவி என்ற புதிய படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

* பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம்பலூர், துறைமுகம் மற்றும் 25 நாட்கள் மும்பையில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். 

ஒத்தி வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி

* சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments