🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔
* லூசிஃபர் ரீமேக்கில் நயன்தாரா
* விளம்பர பாடலில் நடனமாடிய யோகி பாபு
* "தி பேமிலி மேன்" வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா
* என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் - நடிகை சமீரா ரெட்டி
* கீர்த்தி சுரேஸ் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு கொரோனா காரணமாக ரத்து
* கர்ணன் படக்குழுவினருக்கு பிரசாந்த் வாழ்த்து
லூசிஃபர் ரீமேக்கில் நயன்தாரா
* மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.
தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளம்பர பாடலில் நடனமாடிய யோகி பாபு
* பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
"தி பேமிலி மேன்" வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா
* நடிகை சமந்தா, "தி பேமிலி மேன்" வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி-யில் எண்ட்ரி கொடுக்கிறார். பேமிலி மென் வெப்தொடர் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமந்தா இந்த வெப்தொடரில் வில்லியாக நடிக்கிறார்.
என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் - நடிகை சமீரா ரெட்டி
* வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஸ் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு கொரோனா காரணமாக ரத்து
* மகேஷ்பாபுவும் கீர்த்தி சுரேசும் முதல் முறையாக இணையும் தெலுங்கு படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு படப்பிடிப்பு அரங்கிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர்.
கர்ணன் படக்குழுவினருக்கு பிரசாந்த் வாழ்த்து
* நடிகர் பிரஷாந்த், சமீபத்தில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். அதன்பிறகு இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்த பிரசாந்த், அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.
0 Comments