🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔
* அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ்?
* உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா?
* மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்
* திரில்லர் படமாக உருவாகும் ஹன்சிகா நடிக்கும் ‘105 மினிட்ஸ்’
அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ்?
* ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம்.
தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா?
* நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள், உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.
மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்
* மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரில்லர் படமாக உருவாகும் ஹன்சிகா நடிக்கும் ‘105 மினிட்ஸ்’
* நடிகை ஹன்சிகா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘105 மினிட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம்.
திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது.
இதேபோல் தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடிக்கும் ‘இரவின் நிழல்’ என்கிற படமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments