#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

நீயா நானா VS தமிழா தமிழா - (07.03.2021)

நீயா நானா VS தமிழா தமிழா - (07.03.2021)

நேற்று (07.03.2021) நான் பார்த்த சின்னத்திரை நிகழ்ச்சியில் நீயா நானா மற்றும் தமிழா தமிழா இரண்டு நிகழ்ச்சிகளும் பார்த்தேன். ஒன்றுக்கொன்று சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருந்தது இந்த விவாத நிகழ்ச்சி.

நீயா நானா நிகழ்ச்சியில்,

1.குடிப்பது தவறு என்று சொல்லும் ஒரு குழுவும் 

2.சோசியல் ட்ரிக்கிங் தவறில்லை என சொல்லும் ஒரு குழுவும் விவாதித்தனர். 

ஹை லைட்ஸ்

1.கணவன் ஏற்கனவே குடிப்பழக்கம் இருப்பதை சொல்லி விட்டதாலும், அளவாக அருந்துவதாலும் ஒரு பிரச்னையும் இல்லை என ஒரு தரப்பு கூறியது.

2.இதற்கு எதிர் தரப்பு அதெப்படி அளவாக குடிக்க முடியும்? குடி என்றாலே நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகி குடிநோயாளிகளாக தானே மாறுவார்கள். இதெப்படி குடும்பத்திற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். மேலும் பிரச்சனையை அதிகரிக்கத்தானே செய்யும் என விவாதித்தார்கள்.

இறுதி முடிவாக 

1.குடிக்கு ஆதரவான குழுவிடம் எதிர்குழு, உங்கள் மகன் குடிப்பதை ஆதரிப்பீர்களா? என சரியான கேள்வியை கேட்டு அந்த குழுவை மடக்கியது.      

2.அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதுவும் சரிதானே கணவன் குடிக்கலாம் என்றால் மகனும் குடிக்கலாம்தானே?

3.இறுதியாக  குடிப்பழக்கம் தவறு என்ற விளக்கத்தோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தமிழா தமிழா நிகழ்ச்சியில்,

குழந்தைகளை தனியாக வளர்க்கும் பெற்றோர் ஒரு குழுவும்  

அவர்களின் குழந்தைகள் ஒரு குழுவும் விவாதித்தனர்.  

ஹை லைட்ஸ்

 1.ஒரு ஆண் தனியாக ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் போதும், திருமணத்திற்கு பிறகு தனியான ஒரு தந்தையாக உறவுகளிடம் பட்ட அவமானங்களையும்.

2.ஒரு பெண் தனித்தாயாக குழந்தைகளை வளர்க்கும்பொழுது இந்த சமூகம் அவர்களை பார்க்கும் விதம், நடத்தும் விதம் என நிறைய நெகிழ்ச்சியூட்டும் விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்டது.

3.அவர்களின் குழந்தைகள் வயதுக்கு மீறிய பக்குவத்துடன் பேசியது ஆச்சர்யத்தை கொடுத்தது. ரசிக்கவும் வைத்தது.

4.அந்த பாடல் பாடிய சிறுவனும் அந்த தாயும் ரசிக்க வைத்தனர்.

இறுதி முடிவாக

நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடுவர்களில் ஒருவர் பேசும்பொழுது, 

1.நான் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்று சொல்லாதீர்கள். பிடிக்காத ஒரு விஷயத்தைத்தான் கஷ்டப்பட்டு செய்வோம். பிடித்த விஷயத்தை இஷ்டப்பட்டுத்தான் செய்வோம் என கூறினார். அது சரிதான், அதே நேரத்தில் குழந்தைகளை தனியாக வளர்ப்பது எளிமையான காரியம் அல்ல. 

2.இந்த சமூகம், குழந்தைகளின் உளவியல் சார்ந்த விஷயங்கள் என நிறைய இருக்கிறது. போகிற போக்கில் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தவும் முடியாது.

Post a Comment

0 Comments