#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

காதல் இது காதல் - திரை விமர்சனம்

 காதல் இது காதல்

நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். காதலித்து வரும் இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். ஊட்டிக்கு செல்லும் அவர்கள், அங்கு ஜாலியாக சுற்றுகின்றனர். கையில் காசு இருக்கும் வரை ஆடம்பரமாக செலவு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொண்டுவந்த பணமெல்லாம் காலியாகிறது.

கையில் பணமில்லாத சமயத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட ஆரம்பிக்கிறது. பின்னர் அது ஈகோ மோதலாக மாறி இருவரும் பிரிந்துவிடுகின்றனர். குடும்பத்தினரிடம் நடந்ததை எடுத்துக்கூறி அவரவரவர் வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர். 

பின்னர் துல்கர் சல்மானுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைக்கிறது. அதே அலுவலகத்தில் நாயகி மாளவிகா மோகனனுக்கும் வேலை கிடைக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது. இதையடுத்து என்ன ஆனது? அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ எனும் மலையாள படமான இது, தற்போது தமிழ் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் திரையுலகில் அறிமுகமானபோது வந்த படம் என்பதால் அவர்களது நடிப்பு பெரிதாக கவரவில்லை. மற்றபடி ஜெயப்பிரகாஷ், சீதா, இளவரசு, லீமா பாபு ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குனர் அழகப்பன், அவர் இயக்கிய முதல் படம் இது. 

வேகம் குறைவாக சென்றாலும் மலையாளப்படங்களின் பலமே கதை மற்றும் திரைக்கதைதான். படத்தின் கதை, பல படங்களில் பார்த்து பழகிய கதை போல் உள்ளது பின்னடைவாக உள்ளது. திரைக்கதையும் மெதுவாக நகர்வது சோர்வைத் தருகிறது. டப்பிங்கும் லிப் சிங்காகவில்லை.

படத்திற்கு ஒளிப்பதிவும் இவரே செய்திருக்கிறார். வண்ணமையமான காட்சி அமைப்பால் கவர்ந்திருக்கிறார். எம் ஜெயச்சந்திரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மூலம் ஓரளவு ரசிக்க வைத்துள்ளார்.

 காதல் இது காதல் - பழசு 



சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments