#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

சர்ச்சைகளால் வளர்ந்தவரா இயக்குனர் பாலா?

 1.இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யரான பாலா நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் இயக்கி வெளிவந்த படம் சேது. இந்த படம் மெதுவாக சூடுபிடித்து மெகாஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும். விக்ரம் என்ற சிறந்த நடிகரை நமக்கு தந்த படம்.

2.இதன் பின் நந்தா இயக்கினார். இதில் அஜித் நடிப்பதாக இருந்து பிறகு அந்த கதை சூர்யாவுக்கு சென்றது. இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. சேது படம் விக்ரமுக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது போல் இந்த படம் சூர்யாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது.

3.இதே போல்தான் அடுத்து வந்த பிதாமகன் படமும், நான் கடவுள் படமும், அவன் இவன் படமும், பரதேசி படமும், தாரை தப்பட்டை, நாச்சியார் படமும்.

4.இவற்றில் இருந்து ஒரு விஷயம் தெரிந்து கொள்ளலாம் எந்த நடிகர் பாலா படத்தில் நடித்தாலும் அவரை அந்த படம் பட்டை தீட்டி நல்ல நடிகராக மாற்றுகிறது அல்லது அந்த நடிகருடைய திறமையை வெளிப்படுத்த செய்கிறது.

5.சரி இவ்வளவு திறமைகள் இருந்தும் பாலா என்ற இயக்குனர் வெறும் சர்ச்சைகளால் மட்டும் அறியப்படுவது ஏன்? இது பற்றி இந்த கட்டுரையில் அலசலாம்.

6.பத்திரிகையாளர்களுக்கு மிக நெருக்கமான நபராக அறியப்படும் பாலா, தான் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு இனிமாவாக தெரிகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவுகிறது.

7.பிதாமகன் படத்தின் போது சம்பளம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் விக்ரமுக்கு பாலாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விக்ரமுக்கு பதிலாக முரளியை நடிக்க வைக்க பாலா திட்டமிட்டார். பின் தயாரிப்பாளர் குறுக்கிட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

8.நான் கடவுள் படத்திற்கு அஜித்தை ஒப்பந்தம் செய்து அவரை பயன்படுத்தாமல் அவரிடம் அட்வான்ஸ் தொகையை வட்டியோடு கேட்டு மிரட்டல் விடுத்ததாக அப்போது பரபரத்தது கோலிவுட்.

9.அதன்பின் பரதேசி, நாச்சியார், மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என சொந்த படங்கள் எடுத்தார் பாலா.

10.கடைசியாக விக்ரம் மகன் துருவ்விக்ரமை வைத்து தெலுங்கு படமான அர்ஜூன்ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் பாலா இயக்க, அந்த படம் பிடிக்காமல் படத்தையே தூக்கி கிடப்பில் போட்டு விட்டு ஆதித்யவர்மா என்ற பெயரில் புதியதாக எடுத்தனர். இது திரைஉலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அதன் பின் இந்த வர்மா படம் ஓடிடி தளத்தில் வெளிவந்தது தனிக்கதை.

சரி இவ்வளவு சர்ச்சைகள் ஏன் பாலாவை சுற்றி நடக்கிறது. அவரின் முன்கோபமா? அல்லது படைப்பு சார்ந்த பிடிவாதமா?

காரணம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் ஆனால் தமிழ் சினிமா, காமா சோமா ஸ்டைலில் சென்று கொண்டு இருந்த பொழுது எதார்த்த மனிதர்களை நமக்கே தெரியாத ஆச்சர்யமூட்டும் வித்யாசமான கதையை படமாக்கிய, நல்ல நடிகர்களை உருவாக்கிய அல்லது வெளிகொண்டுவந்த  பாலா, மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.


Post a Comment

0 Comments