90s கிட்ஸ் நாஸ்டாலஜி / இயக்குனர் விக்ரமன்
70s, 80s காலகட்டங்களில் பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் என பல இயக்குனர்கள் இருப்பது போல் 90s காலகட்டங்களுக்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இயக்குனர் திரு.விக்ரமன் அவர்கள்.
2.விக்ரமனின் படங்கள் திரையில் நம்மைப்பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் அவமானங்கள், காதல் தோல்விகள், கடினமான பாதைகள் கடந்து போராடி அவன் வெற்றி பெறுவதை வெகு ஜன மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு இயல்பாக காட்சிப்படுத்தி இருப்பார் விக்ரமன்.
3.மினிமம் பட்ஜெட், ரசிக்க வைக்கும் காட்சிகள், மாடிவீட்டில் சின்னதாக ஒரு வாடகை வீடு, ஒரு பெண் சில ஆண் நண்பர்கள் என அந்த காலத்துக்கு புதிதான ஒரு கதைக்களத்துடன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் புதுவசந்தம். இந்த காலத்திலும் பழமைவாதிகள் ஏற்றுக்கொள்ள தயங்கும் ஒரு கதை ஆனால் தன்னுடைய வித்தியாசமான திரைக்கதை மூலம் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார் விக்ரமன்.புதுவசந்தம் திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாகவும் அமைந்தது.
4.அதன்பின் இரண்டாவது படமும், மூன்றாவது படமும் தோல்வியைத்தழுவ மீண்டும் கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் என மீண்டும் பார்முக்கு வந்தார் விக்ரமன்.உயிரிழந்த காதலனின் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் காதலி என கோகுலம் படத்திலும், ஏமாற்ற போகும் காதலி என தெரியாமல் சின்ன வயதிலிருந்தே அவளது வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கி ஏமாறும் காதலன் என பாத்திரப்படைப்புகள் ஒவ்வொருவரையும் ரசிக்க வைக்கும்.
5.இவர் இயக்கத்தில் உருவான பூவேஉனக்காக படமும் வித்யாசமான கதை அமைப்பில் பம்பர் ஹிட் அடித்த படம். ஒரு தலை காதலில் தோல்வியடைந்த ஒருவன் அந்த காதலியின் காதலுக்காக உதவும் ஒரு கதை. நடிகர் விஜய்க்கு "புதிய பாதையை" அமைத்து கொடுத்த படம் இது.
6.அடுத்த படமான சூர்யவம்சம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. பாடல்களும் கதையமைப்பும், காமெடியும் என எவர்க்ரீன் படமாக அமைந்தது. பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.ஏமாற்றும் காதலி. அந்த உண்மை தெரிந்து கதாநாயகனை மணக்க விரும்பும் கதாநாயகி என படம் இன்றும் ரசிக்கும்படி இருக்கும்.
7.அதன் பின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் வானத்தைப்போல படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தது. "வானதைப்போல" படத்தைப்பற்றி சுவாரஸ்யமான தகவல் ஓன்று உண்டு. வானதைப்போல கதை எழுதும்பொழுது வேறுவடிவத்தில் வேறு கதையாக எழுதியிருக்கிறார் விக்ரமன் சூர்யவம்சம் எடுக்கும் முன் எழுதிய இந்த கதையில் நாயகனாக காமெடி நடிகர் ஜனகராஜை இயக்க நினைத்திருக்கிறார். பின் பல மாற்றங்களுடன் விஜயகாந்த் நடிக்க "வானதைப்போல " படமாக வெளிவந்திருக்கிறது.
8.பின் மீண்டும் விஜயுடன் உன்னை நினைத்து படத்தில் இணைந்தார்கள் ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆரம்ப கட்டத்திலேயே பிரிந்தனர் விஜயும் விக்ரமனும். விக்ரமன் கதையை சரி செய்து இருக்கலாம். அல்லது விஜய் விக்ரமனுக்காக விட்டுக்கொடுத்து இருக்கலாம். பிறகு சூர்யா நடிக்க உன்னை நினைத்து கலவையான விமர்சனத்துடன் வெற்றிப்படமாக அமைந்தது.
9.பிறகு மாதவன் நடிக்க பிரியமான தோழி படம் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்து ஆவெரேஜ் படமாக வெற்றிபெற்றது இருப்பினும் அவர் அப்டேட் ஆகாமல் இயக்கிய படமாக இந்த படம் அமைந்தது. அந்த நேரத்தில் ஜெயம், காதல் கொண்டேன் போன்ற படங்கள் பயங்கரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம் இந்த படம் பெரிதாக எடுபடவில்லை.
11.திரையில் ஆபாசமில்லாத, ரசிக்க வைக்கும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்.
12.சமீபத்திய பேட்டியில் இயக்குனர் விக்ரமன் அவரது மனைவியின் உடல் நிலை சரி இல்லாததால் படம் எடுக்காமல் இருப்பதாக சொல்லி இருந்தார். அவருடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து அவர் மீண்டும் படம் இயக்க வேண்டும். புது வசந்தம் , சூர்யவம்சம் போல பல படங்கள் நமக்கு தர வேண்டும் என இந்த கட்டுரை மூலம் வாழ்த்துக்களுடன் வேண்டுகோள் விடுப்போம்.
0 Comments