#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

பிரபல நடிகர்களின் திருப்பு முனை படங்கள் - பார்ட் 2

   பிரபல நடிகர்களின் திருப்பு முனை படங்கள் - பார்ட் 2  

 அஜித் - காதல்மன்னன் 

முதல் படத்திலிருந்து ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெற்ற ஆசைநாயகன் அஜித்திற்கு இது ஒரு கமர்ஷியல் படம். ஆரம்பம் முதல் விறுவிறுப்பு குறையாமல் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்.


விக்ரம்  - சேது

தொடர் தோல்வியாளர்களுக்கு தன்னம்பிக்கை டானிக் என்று விக்ரமை சொல்லலாம். இந்த அளவிற்கு தோல்வியை தாங்கி, தாண்டி வருவது ஆச்சர்யமான ஒன்று. விக்னேஷ் இந்த வாய்ப்பை தவற விட பாலாவுடன் அடித்தது விக்ரமுக்கு ஜாக்பாட்.


சூர்யா - நந்தா

சிவகுமார் குடும்ப பின்புலம் இருந்தாலும், அஜித் நடிக்க வேண்டிய படத்தில் அறிமுகம் இருந்தும், பெரிய அளவில் சோபிக்காமல் காமா சோமா ஹீரோவாக இருந்த சூர்யா, பாலாவின் பட்டறைக்கு சென்ற பின் கொடுத்த முதல் வெற்றிப்படம்.


தனுஷ் - காதல் கொண்டேன் 

முதல் படமான துள்ளுவதோ இளமையில் கூட்டத்தில் ஒருவனாக வந்த தனுஷ், அட அந்த பையனா இந்த பையன் என ஆச்சர்யப்படும் அளவிற்கு வெறி கொண்டு நடித்த படம்.


சிம்பு - மன்மதன் 

விரல் நடிகர், விளையாட்டு பையன் இவர் என்ன செய்ய போறார் என அலட்சியமாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சிம்பு மன்மதன் மூலம். சிவப்பு ரோஜாக்கள் சாயல் இருந்தாலும் திரைக்கதையிலும், இயக்கத்திலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப அப்டேட்ட-டாக இருந்தது இந்த படம்.


பரத் - காதல் 

பாய்ஸ் படத்தில் அறிமுகம் கிடைத்தாலும், செல்லமே படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தாலும், பரத்திற்கு வித்தியாசமான, எதார்த்தமான முதல் வெற்றிப்படமாக அமைந்தது இந்த படம்.




சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments