#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

இரட்டைக்குதிரை பயணம் ஆனால் அதில் வெற்றி

இரட்டைக்குதிரை பயணம் ஆனால் அதில் வெற்றி 

தமிழ் சினிமாவில் இரண்டு மாறுபட்ட வழிகளில் நடிகர்கள் பயணம் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த கட்டுரையில் அதை பற்றி பார்ப்போம்.

கமல் - சீரியஸ் படங்கள் v /s காமெடி படங்கள்

இந்த இரட்டைக்குதிரை சவாரியை மிகச்சரியாக செய்தது கமல் என்று சொல்லலாம். ஒருபுறம் குணா, மகாநதி போன்ற படங்கள் மற்றொருபுறம் மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள் போன்ற பல்வேறு படங்களில் இரட்டைக்குதிரை சவாரி செய்துள்ளார். ஆனால் இவரா அவர்? இப்படி சீரியஸ் ஆக நடித்தவரா, இப்படி காமெடிக்கு பொருந்துகிறார் என தோன்றும். சதிலீலாவதி படத்தில் கோவை சரளாவுக்கு ஜோடியாக கொங்கு தமிழில் அசத்தியிருப்பார் மனிதர். அதே சமயம் வெளிவந்த இந்தியன் படத்தில் நடிப்பின் வேறு பரிமாணத்தை காட்டி இருப்பார்.


விஜயகாந்த் - போலீஸ்  v /s கிராம நாயகன் 

விஜயகாந்தும் இவர்களுக்கு சளைத்தவர் அல்ல. ஒருபுறம் போலீஸ் படங்களாகவும், மற்றொருபுறம் முற்றிலும் வேறுபட்ட கிராம கதைகளிலும் நடித்து அசத்தியுள்ளார். வனத்தைப்போல, சொக்கத்தங்கம் போன்ற படங்களில் கிராம நாயகனாகவும், பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும் செமயாக நடித்திருப்பார்.


ரஜினி - மாஸ் படங்கள் v /s காமெடி படங்கள் 

ரஜினி ஆரம்ப காலகட்டங்களில் நிறைய சவாலான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும், முதல் வரிசை நடிகர் ஆனதற்கு பின் இரட்டைக்குதிரை சவாரியும் செய்துள்ளார்.

அண்ணாமலை போன்ற மாஸ் படங்கள் ஒருபுறமும், வீரா போன்ற காமெடி மற்றும் பேமிலி சென்ட்டிமென்ட் படங்களிலும் நடித்துள்ளார்.



கார்த்திக் - நகர்ப்புற நாயகன்   v /s கிராம நாயகன் 

கார்த்திக்கும் இந்த வரிசையில் படித்த நகர்ப்புற நாயகனாகவும், கிராமப்புற நாயகனாகவும் அருமையாக நடித்து இரட்டைக்குதிரை சவாரியில் இணைகிறார். மௌனராகம், அக்னி நட்சத்திரம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் நகர்ப்புற நாயகனாகவும், பொன்னுமணி, கிழக்குவாசல்,தெய்வவாக்கு போன்ற படங்களில் கிராம நாயகனாகவும் கலக்கியிருப்பார்.

Post a Comment

0 Comments