#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

இளையராஜா சர்ச்சைகள் கூட்டணி முறிவுகள் ஏன்? - பார்ட் 2

 இளையராஜா சர்ச்சைகள் கூட்டணி முறிவுகள் ஏன்? - பார்ட் 2

இளையராஜா சர்ச்சைகள் பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


இளையராஜா - மணிரத்னம் கூட்டணி முறிந்தது ஏன்?

மணிரத்னத்தின் முதல் படத்திலிருந்து இசையமைத்து கொண்டு இருக்கிறார் இளையராஜா. மணிரத்னம் படத்தில் ராஜாவின் இசை ஒரு கேரக்டர் ஆகவே இருக்கும். தளபதி படத்திற்கு பிறகு பாலச்சந்தரால் வேறு இசையமைப்பாளரிடம் சென்றதாக தயாரிப்பாளர் நடராஜன் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். எதுவாகினும் இளையராஜாவை பிரிந்தது மணிரத்னத்திற்கு நஷ்டமே.


இளையராஜா - பாரதிராஜா பிரிந்தது ஏன்?

இவர்கள் வாய்ப்பு தேடும் காலத்தில் இருந்தே நண்பர்கள். முதல் படத்திலிருந்தே தேர்ந்த இசையை ராஜா அவருக்கு வழங்கி கொண்டு இருந்தார். நாடோடித் தென்றல் படத்திற்கு இளையராஜாதான் கதை எழுதி இருந்தார். அவருடைய கதையை பாரதிராஜா சரியாக பயன்படுத்தாததால் இவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.


இளையராஜா - பாலசந்தர்  பிரிந்தது ஏன்?

புன்னகை மன்னன் படத்தில் இளையராஜாவை தவிர யாராலும் அந்த அளவிற்கு பாடலிலும், இசையிலும் உயிர் கொடுத்திருக்க முடியாது. பின் சிந்து பைரவி , படமே இசையை மையமாக வைத்துதான். புதுப்புது அர்த்தங்கள் படம் அந்த வருதீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக திட்டமிட்டு இருந்தார் பாலசந்தர் ஆனால் அந்த நேரத்தில் நிறைய படங்களில் இளையராஜா பிஸியாக இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்து தர முடியவில்லை. இளையராஜா காத்திருக்க சொன்னார். நேரமில்லாததால் பாலசந்தர் இளையராஜாவின் ட்ராக்குகளை பயன்படுத்தி பின்னணி இசையை கோர்த்து ரிலீஸ் செய்து விட்டார். அந்த கோபத்தில்தான் இளையராஜா பாலச்சந்தரின் அடுத்தடுத்த படத்திற்கு இசையமைக்கவில்லை. அதன்பின் பாலசந்தர் மரகதமணி போன்ற இசையமைப்பாளர்களிடம் சென்றார்.





சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments