#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

இளையராஜா சர்ச்சைகள் - கூட்டணி முறிவுகள் ஏன்?

 இளையராஜா சர்ச்சைகள் -  கூட்டணி முறிவுகள் ஏன்?  

திரை உலகை மூன்று தலைமுறைகளாக ஆண்டுகொண்டிருக்கும் இளையராஜா இசை உலகின் ராஜா என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய பாடல்களை பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது. சரி இவரை பற்றி என்ன சொல்ல போகிறாய் என்று கேட்கிறீர்களா? உச்சகட்ட புகழ் இருக்கும் ஒருவருக்கு சர்ச்சைகள் இருப்பதும் இயல்பு. சரி இவரை பற்றிய சர்ச்சைகளை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


இளையராஜா - வைரமுத்து பிரிந்தது ஏன்?

இளையராஜா - வைரமுத்து கூட்டணி நிழல்கள் படத்திலிருந்து தொடங்கியது. "இது ஒரு பொன்மாலைப்பொழுது" பாடல் ஒன்று போதும் டீம் ஒர்க் என்றால் என்ன என்பதை விளக்க...ராஜாவின் இசையா? வைரமுத்துவின் வரிகளா? பாரதிராஜாவின் இயக்கமா? கண்ணனின் ஒளிப்பதிவா? ம்.. அப்படி இருக்கும் அந்த பாடல். இது போல பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளனர். 

சரி இவர்களிடையே என்ன பிரச்சனை?.. "எந்தன் கைக்குட்டையில்" பாடல் பதிவின் போது சில திருத்தங்கள் இளையராஜா சொன்னது வைரமுத்து ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. அது இல்லாமல் பெரும்பாலான பாடல்களுக்கு இளையராஜாதான் பல்லவி கூறுவார் என கூறப்படுகிறது. மேலும் வைரமுத்துவை சாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. 


வைரமுத்து இளையராஜாவை பிரிந்த பின் பல இசையமைப்பாளர்களை பரிந்துரைத்ததாக கூறியிருக்கிறார். அவர்களில் சிலர்தான் மரகதமணி அதாவது பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர். என்னதான் இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கு எதிராக இது போல் வைரமுத்து செய்திருக்க கூடாது. அதே நேரம் இளையராஜாவும் தன ஈகோவை மறந்து கொடுத்திருக்க வேண்டும். சரி எதுவாகினும் உண்மையான காரணம் அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

Post a Comment

0 Comments