திரிசூலம் படத்தின் வெற்றிக்கதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர்-க்கு முன்பே ஒரு வெற்றிப்பட கதாநாயகனாக இருந்தாலும் அவர்கள் இருவரும் நடிக்கும்பொழுது மாறி மாறி வெற்றிகளை கொடுத்தனர். பெண் ரசிகைகள் இருவருக்குமே இருந்தனர்.மேல் தட்டு மக்கள் அதாவது ஏ சென்டர் என்று சொல்லக்கூடிய படித்த , நகர்ப்புற , பணக்கார வர்க்கத்தினர் அதிகமாக சிவாஜி கணேசன் படங்களை ரசித்தனர்.
இந்த அளவிற்கு புகழின் உச்சத்திலிருந்த சிவாஜி கணேசனுக்கும் திரை உலகில் சரிவு வந்தது. 1976 க்கு பிறகு ரஜினி கமல் என இளம் நடிகர்கள் வெற்றிக்கொடியை பறக்க விட , சிவாஜி கணேசன் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன.இனி சிவாஜி கணேசன் அவ்வளவுதான் அவர் மார்க்கெட் காலி என்று அனைவரும் சொல்ல அவரின் படங்களின் ரிசல்ட்டும் அப்படித்தான் இருந்தது.
தொடர்ந்து 13 படங்கள் கடும் தோல்விக்கு பிறகு 23 ஜனவரி 1979-இல் வெளியான படம்தான் திரிசூலம்.இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த 200-வது திரைப்படம் ஆகும்.

இது ஒரு மசாலா படமாக இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது எனலாம். உண்மையான உழைப்போடு ஒரு வேலையை ரசித்து செய்தால் எவ்வளவு தோல்வி வந்தாலும் அனைத்தையும் தாண்டி வெற்றி பெறலாம் என்பதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு உதாரணம்.
0 Comments